சென்னையில் கைவரிசை காட்டிய ராம்ஜிநகர் திருடர்கள் கைது:

0
1

சென்னையில் கைவரிசை காட்டிய ராம்ஜிநகர் திருடர்கள் கைது:

சென்னை அண்ணாநகர் பகுதியில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஷாப்பிங் மால்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்களில் கண்ணாடி உடைக்கப்பட்டு விலை உயர்ந்த பொருள்கள் திருடப்பட்டதாக புகார்கள் வந்த வண்ணம் இருந்தது.

இதனையடுத்து, போலீசார் குற்றவாளிகளை பிடிக்க தனிக்குழு அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தது.

4
2

இந்நிலையில் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை பார்வையிட்டபோது இக்குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டது திருச்சி ராம்ஜிநகரைச் சேர்ந்த டீனு அகமது ( 23 ) , தீனதயாளன் ( 22 ) , ரோகன்தேவ் ( 24 ) , ராஜாராம் ( 29 ) , கிரண்குமார் ( 24 ) , தினேஷ்குமார் ( 25 ) , சுப்ரமணி ( 48 ) மற்றும் 17 வயது சிறுவனை ஆகியோரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து விலை உயர்ந்த 3 லேப்டாப்கள்,  ரூ.1.16 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் பெங்களூரில் இருந்து திருடிய 5 லேப்டாப்களும் பறிமுதல் செய்யப்பட்டன

மேலும் போலீசார் இது குறித்து அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

3

Leave A Reply

Your email address will not be published.