திருச்சி அரசு மருத்துவமனையில் ரூ.1.75 கோடி மதிப்பீட்டில் ஆக்சிஜன் உற்பத்தி மையம்:

0
1

திருச்சி அரசு மருத்துவமனையில் ரூ.1.75 கோடி மதிப்பீட்டில் ஆக்சிஜன் உற்பத்தி மையம்:

திருச்சி அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள் அமைக்கும் பணி கடந்த சில மாதங்களுக்கு முன்பு துவங்கப்பட்டது. இந்நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் ரூ. 1.75 கோடி மதிப்பீட்டில் நிமிடத்திற்கு 1000 லிட்டர் ஆக்சிஜன் தயாரிக்கும் உற்பத்தி மையத்தை நேற்று (8.10.2021) பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து திருச்சி அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்தி மையத்தை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலத் துறை முதன்மைச் செயலாளர் மணிவாசன் மற்றும் மாவட்ட ஆட்சியர் சிவராசு ஆகியோர் மருத்துவ சேவை பயன்பாட்டிற்கு இயக்கி வைத்தனர்.

2

இதுகுறித்து திருச்சி அரசு மருத்துவமனை டீன் வனிதா கூறியதாவது:

திருச்சி அரசு மருத்துவமனையில் ரூ. 1.75 கோடி மதிப்பீட்டில் நிமிடத்திற்கு 1000 லிட்டர் ஆக்சிஜன்  உற்பத்தி மையம் துவங்கப்பட்டுள்ளது.  ஆகையால், இனி ஆக்ஸிஜன் தட்டுபாடு ஏற்படாது. தனியார் மருத்துவமனைகளில் கிடைக்கும் அனைத்து சிகிச்சைகளும் தற்போது அரசு மருத்துவமனைகளில் வழங்கப்பட்டு வருகிறது. இதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.

 

3

Leave A Reply

Your email address will not be published.