சிறுபான்மையினருக்கான கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்:

0
1

சிறுபான்மையினருக்கான கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்:

2021-22 ஆம் கல்வியாண்டில் ஒன்று முதல் 10 ஆம் வகுப்பு வரை பயிலும் சிறுபான்மை மாணவ , மாணவிகளுக்கு பள்ளி படிப்பு கல்வி உதவித்தொகையும், 11 ஆம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை (ஐ.டி.ஐ. ஐடிசி , வாழ்க்கை தொழிற்கல்வி , பாலிடெக்னிக் , செவிலியர் / ஆசிரியர் பட்டயப்படிப்பு , இளங்கலை , முதுகலை பட்டப்படிப்புகள் உட்பட) பயில்பவர்களுக்கு பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகையும் மற்றும் தொழிற்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வி பயில்பவர்களுக்கு தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை பெறுவதற்கு இந்திய அரசின் www.scholarships.gov.in என்ற தேசிய உதவித்தொகை இணையதளத்தில் (NSP) ஆன்லைன் மூலம் வரவேற்கப்படுகின்றன .

கல்வி தகுதியான மாணவ , மாணவிகள் பள்ளி படிப்பு கல்வி உதவித்தொகைத் திட்டத்திற்கு 15.11.2021 வரையிலும் , பள்ளி மேற்படிப்பு மற்றும் தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித் தொகைக்கு 30.11.2021 வரையிலும் மேற்படி இணைய தளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் .

2

இந்திய அரசின் தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் (NSP ) ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ள கல்வி நிலையங்கள், தங்களின் கல்வி நிலையத்திற்கான ஒருங்கிணைப்பு அலுவலரின் ( Nodal officer ) ஆதார் விவரங்களை இணைத்த பின்னரே விண்ணப்பங்களை இணையத்தில் சரிபார்க்க இயலும் . புதியதாக விண்ணப்பிக்கும் மாணவ , மாணவிகள் இணையதளத்தில் எளிதாக விண்ணப்பிக்கும் வகையில் அனைத்து கல்வி நிலையங்களும் தங்களுடைய UDISE / AISHE / NCVT குறியீட்டு எண்ணை மாணவ , மாணவிகளுக்குத் தெரிவிக்க வேண்டும் .

இத்திட்டம் தொடர்பான இந்திய அரசால் வெளியிடப்பட்ட வழிகாட்டி நெறிமுறைகள் http://www.minorityaffairs.gov.in/schemes/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது . இத்திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியரகத்தில் இரண்டாம் தளத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரைத் தொடர்பு கொள்ளலாம் .

இத்தகவலை திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு , இ.ஆ.ப., தெரிவித்துள்ளார் .

3

Leave A Reply

Your email address will not be published.