திருச்சியில் சாலையை கடக்க முயன்ற 2 பேர் விபத்தில் பலி:

திருச்சியில் சாலையை கடக்க முயன்ற 2 பேர் விபத்தில் பலி:
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பகுதியைச் சேர்ந்தவர் முத்துக்கருப்பன் (70). இவர் திருவெறும்பூர் அருகே பாலாஜி நகரில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி உள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது, சாலை கடக்க முயன்றுள்ளார். அப்போது அவ்வழியாக வந்த இரு சக்கர வாகனம் மோதி முத்துக்கருப்பன் உயிரிழந்தார்
இதேபோல் துவாக்குடி அருகே உள்ள அரவக்குறிச்சி பட்டி பகுதியை சேர்ந்தவர் சுந்தர் சாமி (55). இவர் நேற்று முன்தினம் ஓசூர் அருகே திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற போது அவ்வழியாக வந்த கார் மோதி உயிரிழந்தார்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
