திருச்சியில் டாஸ்மாக் ஊழியரை தாக்கி செல்போன் பறிப்பில் ஈடுபட்ட இருவர் கைது:

0
1

திருச்சியில் டாஸ்மாக் ஊழியரை தாக்கி செல்போன் பறிப்பில் ஈடுபட்ட இருவர் கைது:

திருச்சி திருவெறும்பூர் துவாக்குடி அருகே உள்ள மேலமாங்கா வானம் பகுதியை சேர்ந்தவர் தர்மராஜ் (47). இவர் இதே பகுதியில் உள்ள அரசு அனுமதிபெற்ற டாஸ்மார்க்கில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் வழக்கம்போல் பணி முடித்துவிட்டு வந்துகொண்டிருந்தபோது பைக்கில் வந்த அடையாளம் தெரியாத 2 நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த ரூ.3000 பணம் மற்றும் செல்போனை பறித்து கொண்டு கத்தியால் காயப்படுத்தி விட்டு தப்பி சென்றனர் .

2

இதுகுறித்து தர்மராஜ் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

போலீசாரின் விசாரணையில் காட்டூர் அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த ராஜா முகமது மற்றும் வடக்கு காட்டூர் அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த ஸ்டீபன் ஜோன்ஸ் ஆகிய இருவரும் டாஸ்மாக் ஊழியர் தர்மராஜிடம் பணம் மட்டும் செல்போன் பறிப்பில் ஈடுபட்டது தெரிய வந்தது.

இதனையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

3

Leave A Reply

Your email address will not be published.