திருச்சிராப்பள்ளி தூய வளனார் கல்லூரியில் மாணவர் பட்டிமன்றம்

0
1

திருச்சிராப்பள்ளி தூய வளனார் கல்லூரியில் மாணவர் பட்டிமன்றம்

திருச்சிராப்பள்ளி தூய வளனார் கல்லூரித் தமிழாய்வுத்துறை வளனார் தமிழ்ப் பேரவையின் சிறப்பு நிகழ்வாக மாணவா் பட்டிமன்றம் நடைபெற்றது.

இயங்கலையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தமிழாய்வுத்துறை உதவிப் பேராசிரியா் முனைவா் டே.வில்சன் வரவேற்புரையாற்றினார்.

4

 

தமிழாய்வுத்துறைத் தலைவா் முனைவா் ஞா.பெஸ்கி தலைமை வகித்தார். தம் தலைமையுரையில், இந்த பட்டிமன்றம் முழுக்க முழுக்க மாணவா் பங்கேற்பினால் நடைபெறுவது பெரும் மகிழ்வைத் தருகிறது. மாணவா் பங்கேற்பினால் வளனார் பேரவை நிகழ்வுகள் சிறப்பாக அமையட்டும் என்று கூறிப் பட்டிமன்ற பேச்சாளா்களான மாணவா்களையும், வளனார் பேரவைப் பொறுப்பாசிரியா்களையும் பாராட்டித் தம் தலைமையுரையை நிறைவு செய்தார்.

2

இன்றைய சூழலில் வாழ்க்கை என்பது பூந்தோட்டமா? போராட்டமா? என்னும் மையப்பொருளில் மாணவா் பட்டிமன்றம் நடைபெற்றது. சேலம் கைலாஷ் மகளிர் கல்லூரியின் மேனாள் முதல்வா் முனைவா் வே.சங்கர நாராயணன் நடுவராகப் பங்கேற்ற இந்த மாணவா் பட்டிமன்றத்தில் முனைவா் பட்ட ஆய்வாளா்கள் கி்.ஜோஸ் ஆல்வின், அ.ஞா.உமா மகேஸ்வரி இளங்கலை மாணவா்கள் வீ.அட்சயா மற்றும் பி.லீ.தயாநிதி ஆகியோர் பங்கேற்றுத் தங்கள் கருத்துக்களை முன்வைத்தனர்.

நிறைவில் இன்றைய சூழலில் வாழ்க்கை என்பது போராட்டமே எனத்தீா்ப்பு வழங்கி நிறைவு செய்தார்.

இளங்கலை முதலாம் ஆண்டு மாணவா் சி.பு.சித்ரிகா நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். இறுதியில் இளங்கலை முதலாம் ஆண்டு மாணவா் இரா.ஹரிஹரன் நன்றியுரையாற்றினார். மாணவா் பட்டிமன்றத்தைத் தமிழ்ப்பேரவைப் பொறுப்பாளா்கள் முனைவா் ஆ.மரிய தனபால் மற்றும் முனைவா் இலா.சார்லஸ் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர். பேராசிரியா்கள், தமிழ் இலக்கிய மாணவா்கள் மற்றும் பொதுத்தமிழ் மாணவர்கள் உள்பட 458 பேர் இந்நிகழ்வில் பங்கேற்றுச் சிறப்பித்தனா்.

3

Leave A Reply

Your email address will not be published.