திருச்சி அருகே பள்ளி மாணவி மர்ம மரணம்: உடலைக் கைப்பற்றி போலீசார் விசாரணை

0
1

திருச்சி அருகே பள்ளி மாணவி மர்ம மரணம்: உடலைக் கைப்பற்றி போலீசார் விசாரணை

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உப்பிலியபுரம் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. கூலித் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார் இவரது மகள் சங்கீதா (15),  மற்றும் மகன் சபரிநாதன் (13) உள்ளனர்.

2

சங்கீதா துறையூரில் உள்ள அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று சிறுமி வீட்டில் தனியாக இருந்துள்ளார். நேற்று மாலை சங்கீதாவின் தாய் வீட்டிற்கு திரும்பிய போது கதவு தாள் இடாத நிலையில் சிறுமி தீக்காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தது தெரியவந்தது.

4

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

15 வயது சிறுமி மர்மமான முறையில் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

3

Leave A Reply

Your email address will not be published.