திருச்சி ரயில் நிலையத்தில் கிடந்த குட்கா மூட்டைகள்: போலீசார் கைப்பற்றி விசாரணை:

0
1

திருச்சி ரயில் நிலையத்தில் கிடந்த குட்கா மூட்டைகள்: போலீசார் கைப்பற்றி விசாரணை:

திருச்சி வழியாக ராமேஸ்வரத்திற்கு உத்திரப்பிரதேசத்தில் இருந்து பனாரஸ் ரயில் நேற்று சென்றது. இந்நிலையில் இந்த ரயில் மாலை 4 மணிக்கு திருச்சி ரயில் நிலையம் வந்தபோது பெட்டி எண் 6 மற்றும் 7 ஆகிய வற்றில் பயணிகள் இல்லை. ஆனால் இரண்டு மூட்டைகள் கேட்பாரற்று கிடந்தது .

இதுகுறித்த தகவலின்பேரில் ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வெடிகுண்டு கண்டறியும் பிரிவு வீரர்களை வரவழைத்து மூட்டைகளை சோதனை செய்தனர். மூட்டைகளில் வெடிகுண்டு இல்லை என்பதை உறுதி செய்த பின்பு பிரித்து பார்த்தனர்.

2

அதில் ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள 6 கிலோ எடையுள்ள தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா பொருள்கள் இருந்தது. இதனையடுத்து அவற்றை பறிமுதல் செய்த போலீசார் இச்சம்பவத்தில் ஈடுபட்டது யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

3

Leave A Reply

Your email address will not be published.