திருச்சி அரசு மருத்துவமனையில் வேலைவாய்ப்பு:

திருச்சி அரசு மருத்துவமனையில் வேலைவாய்ப்பு:
திருச்சி அரசு மருத்துவமனையில் தொகுப்பூதிய அடிப்படையில் பல்வேறு காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
காலி பணியிடங்களுக்கான விபரம்:

டிரோமா ரெஜிஸ்டரி அசிஸ்டென்ட் -1 (ரூ .10 ஆயிரம் ) , அவசர சிகிசைப் பிரிவுச் செயலர் -1 ( ரூ .20 ஆயிரம் ) , அறுவைச் சிகிச்சையரங்க தொழில்நுட்ப உதவியாளர் 2 ( ரூ .15 ஆயிரம் ) , மாவட்டத் தொடக்க நிலை இடையீட்டு சேவை மைய உளவியலாளர் -1 ( ரூ .13 ஆயிரம் ) , மது மீட்பு சிகிச்சை மைய உளவியலாளர் -2 ( ரூ .18 ஆயிரம் ) , டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர் -3 ( ரூ .10 ஆயிரம் ) , சமூகப் பணியாளர் -2 ( ரூ .18 ஆயிரம் ) , ஆய்வக ஆராய்ச்சி உதவியாளர் -2 ( ரூ .40 ஆயிரம் ) , ஆய்வக உதவியாளர் -1 ( ரூ .6,500 ) , மருத்துவமனைப் பணியாளர் -4 ( மாத தொகுப்பூதியம் ரூ .5 ஆயிரம் ) , தூய்மைப் பணியாளர் -4 ( ரூ .5 ஆயிரம் ) , காவலர் -2 ( ரூ .6,300 ) ஆகிய தற்காலிக பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
விருப்பமுள்ள நபர்கள் திருச்சிக்கு கி. ஆ. பெ. விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரியில் வரும் (20/10/2011) காலை 10 மணி முதல் நடைபெறும் நேரடி கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம்.
மேலும் விபரங்களுக்கு, மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை மற்றும் கி.ஆ.பெ விசுவநாதம் அரசு மருத்துவக்கல்லூரியின் தக வல் பலகை மற்றும் இக்கல்லூரி இணையதள www.kapvgmc.ac.in முகவரியில் பார்வையிடும்படி திருச்சி கலெக்டர் சிவராசு கேட்டுக் கொண்டுள்ளார் .
