திருச்சி தூய வளனார் கல்லூரி முன்னாள் கையுந்துபந்து விளையாட்டு வீரர்களின் கூட்டம்
திருச்சி தூய வளனார் கல்லூரி முன்னாள் கையுந்துபந்து விளையாட்டு வீரர்களின் கூட்டம்
திருச்சி தூய வளனார் கல்லூரி முன்னாள் கையுந்துபந்து விளையாட்டு வீரர்களின் கூட்டம் 03.10.2021 அன்று தூய வளனார் கல்லூரியில் நடைபெற்றது .
இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கல்லூரியின் ரெக்டர் அருட்தந்தை லியாநாட் பெர்னான்டோ, கல்லூரியின் செயலர் அருட்தந்தை எஸ்.பீட்டர், கல்லூரியின் முதல்வர் அருட்தந்தை ஆரோக்கியசாமி சேவியர் கல்லூரியின் விளையாட்டு ஒருங்கிணைப்பாளர் அருட்தந்தை பெர்க்மென்ஸ் அவர்களும் கலந்து கொண்டனர் .
இவ்விழாவில் 100 க்கும் மேற்பட்ட சர்வதேச மாநில முன்னாள் கையுந்துபந்து விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர் . முன்னாள் விளையாட்டு வீரர்கள் ஒன்றினைந்து கல்லூரி கையுந்துபந்து அணியின் வளர்ச்சிக்காகவும் , முன்னேற்றத்திற்காகவும் ST.JOSEPH’S COLLEGE ALUMNI VOLLEYBALL ACADEMY என்ற அமைப்பை தொடங்கினார்கள் .
இது போல் ஒரு அமைப்பு அகில இந்திய அளவில் அமைக்கப்படுவது இதுவே முதல் முறை என்பது இதன் சிறப்பம்சமாகும் . இந்த அமைப்பின் மூலம் கல்லூரி கையுந்துபந்து அணியின் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்வது என்பது முடிவு செய்யப்பட்டது . மேலும் விழாவில் கல்லூரி அணியின் விளையாட்டு சீருடை அறிமுகப்படுத்தப்பட்டது . இவ்விழாவில் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் உடற்கல்வித்துறை இயக்குநர் , முனைவர் காளிதாசன் , தூயவளனார் கல்லூரியின் உடற்கல்வி இயக்குநர்கள் பிரேம் எட்வின் மற்றும் ரெனில் ஆகியோர் கலந்து கொண்டனர் .
இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை ST.JOSEPH’S COLLEGE ALUMNI VOLLEYBALL ACADEMY உறுப்பினர்கள் சிறப்பான முறையில் செய்திருந்தனர் .