ஸ்ரீரங்கம் கோயில் முன் அனைத்து நாட்களிலும் ஆலயங்கள் திறக்க வலியுறுத்தி -பிஜேபி போராட்டம் அறிவிப்பு!

0
1

கொரோனா நோய் பரவல் காரணமாக அனைத்து மதத்தினரின் வழிபாட்டுத் தலங்களும் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்கள் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பள்ளிகள் திறக்கப்பட்டு இருக்கிறது, தொழிற்சாலைகள், தொழில் நிறுவனங்கள் எல்லாம் குறிக்கப்பட்டிருக்கிறது. அப்படியிருந்தும் இந்துமத கோவில்களில் ஏன் திறக்கப் படவில்லை என்று கேள்வி எழுப்பியதோடு ஒவ்வொரு மாவட்டங்களிலும் உள்ள முக்கிய கோவில்கள் முன் அக்டோபர் 7 நாளை அனைத்து நாட்களிலும் கோயில்கள் செயல்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடத்துவதாக அறிவித்தார்.

இதன் தொடர்ச்சியாக திருச்சி மாவட்ட பிஜேபியின் சார்பில் அனைத்து நாட்களிலும் ஆலயங்கள் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தி திருச்சி ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் அருகே மிகப்பெரிய கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த ஏற்பாடு செய்திருக்கின்றனர். ஆர்ப்பாட்டத்திற்கு திருச்சி மாவட்ட தலைவர் ராஜேஷ் குமார் தலைமை வகிக்கிறார். மேலும் பாஜகவின் மாநில பொது செயலாளர் இரா. ஸ்ரீநிவாசன் சிறப்புரை ஆற்றுகிறார்.

3

Leave A Reply

Your email address will not be published.