திருச்சி ஈ.எஸ்.ஐ.சி மருத்துவமனையில் ஆய்வு

0
1

ஈ.எஸ்.ஐ.சி. வாரியத்தின் சென்ட்ரல்போர்டு மெம்பராக செயல்படும் பாரதிய மஸ்தூர் சங்கத்தின்(பி.எம்.எஸ்.) வி. ராதாகிருஷ்ணன் மற்றும் தமிழ் மாநில போர்டு மெம்பர் ஜீ. சங்கர் ஆகியோர் திருச்சியில் செயல்படும் ஈ.எஸ்.ஐ.சி. மருத்துவமனையின் தரம், படுக்கை எண்ணிக்கையை உயர்த்துவது மற்றும் திருச்சியில் ஈ.எஸ்.ஐ.சி. துணை மண்டல அலுவலகம் அமைப்பதற்கான ஆய்வுகளை 30.09.2021 வியாழன் அன்று மேற்கொண்டனர்.

ரூபாய் 21 ஆயிரத்திற்கும் குறைவாக மாதாந்திர மொத்த ஊதியம் பெறக்கூடிய, காப்பீடு செய்யப்பட்ட தொழில்களில் பணிபுரியும் தொழிலாளர்கள், தொழிலாளர் அரசு ஈட்டுறுதி கழகத்தின் (ஈ.எஸ்.ஐ.சி.) சமூக பாதுகாப்பு திட்டத்தின் வரம்பிற்குள் வருகின்றனர். 1990-ஆம் ஆண்டு முதல் திருச்சியில் செயல்படும் ஈ.எஸ்.ஐ.சி. மருத்துவமனை மற்றும் அந்த மருத்துவமனையின் கட்டுப்பாட்டில் 8 மாவட்டங்களில் இயங்கும் 14 கிளை மருந்தகங்கள் மூலம் தொழிலாளர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினர் என ஒரு லட்சத்து 15 ஆயிரம் நபர்கள் பயன்பெற்று வருகின்றனர். இந்த நிலையில், திருச்சியில் செயல்படும் ஈ.எஸ்.ஐ.சி. மருத்துவமனை, மருத்துவமனை வளாகத்தில் செயல்படும் கிளை மருந்தகம் மற்றும் திருச்சி தில்லைநகர் பகுதியில் செயல்படும் ஈ.எஸ்.ஐ.சி. கிளை அலுவலகம் ஆகிய பகுதிகளில் பாரதீய மஸ்தூர் சங்கத்தின் சார்பாக ஈ.எஸ்.ஐ.சி. மத்திய குழு உறுப்பினராக செயல்படும் வி. ராதாகிருஷ்ணன் மற்றும் தமிழ் மாநில குழு உறுப்பினரான ஜி. சங்கர் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். டிஸ்பென்சரியில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருத்துவ சிகிச்சை, நடமாடும் மருத்துவ சிகிச்சை பிரிவு, மருத்துவமனையில் எக்ஸ்ரே கதிரியக்க பிரிவு, இரத்த மாதிரி ஆய்வு கூடம், உள் நோயாளிகளுக்கான படுக்கை வசதி, நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை மற்றும் அவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் அவற்றை ஆய்வு செய்தனர். மேலும், திருச்சியில் செயல்படும் 50 படுக்கைகள் கொண்ட ஈ.எஸ்.ஐ.சி.

2

மருத்துவமனையை, 100 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையாக உயர்த்துவதற்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஆய்வு செய்தனர்.
ஈரோடு, நாமக்கல் முதல் நாகப்பட்டினம் வரை 17 மாவட்டங்களை உள்ளடக்கி சேலம் மண்டல ஈ.எஸ்.ஐ. அலுவலகம் செயல்பட்டு வருகின்றது. இதில் தொழிலாளர்கள் மற்றும் வேலை அளிக்கும் நிறுவனங்கள் தங்களது குறைகளை நிவர்த்தி செய்துகொள்ள 17 மாவட்டத்தைச் சேர்ந்தவர்களும் சேலத்திற்கு செல்ல வேண்டி இருப்பதால் அவர்கள் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர். எனவே, சேலம் மண்டலத்தை பிரித்து திருச்சியை மையமாக கொண்டு, திருச்சியில் துணை மண்டல அலுவலகம் அமைக்க வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கை நிலுவையில் உள்ளது. தொழிலாளர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் விதமாக திருச்சியை மையமாகக்கொண்டு துணை மண்டல அலுவலகம் அமைப்பதற்கான ஆய்வு பணிகளை மேற்கொண்டனர்.

மேற்கண்ட அனைத்து ஆய்வு பணிகளின் போது சேலம் மண்டலத்தின் துணை இயக்குனர் திரு கார்த்திகேயன், ரீஜினல் மெடிக்கல் ஆபீஸர் டாக்டர் பாரதி, திருச்சி ஈ.எஸ்.ஐ. மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளர் ராஜேந்திரன், திருச்சி சமூக பாதுகாப்பு அதிகாரி திரு ஜகதீஷ் ராஜா, திருச்சி கிளை மேலாளர் திருமதி ரேவதி ஆகியோர் உடன் இருந்தனர்.

3

Leave A Reply

Your email address will not be published.