துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.59 லட்சம் கடத்தல் தங்கம் திருச்சியில் பறிமுதல்:

துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.59 லட்சம் கடத்தல் தங்கம் திருச்சியில் பறிமுதல்:
திருச்சி விமான நிலையத்திற்கு நேற்று முன்தினம்(5/10/2021) துபாயில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வந்தது.
இதில் வந்த பயணிகளிடம் மத்திய வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

அச்சோதனையில், கும்பகோணத்தைச் சேர்ந்த கண்ணன் (38). என்ற பயணி ரூ.33 லட்சம் மதிப்பிலான 695 கிராம் தங்கம் கடத்தி வந்தது தெரியவந்தது. இதேபோல் சூரியபிரகாஷ் (24) என்ற பயணி ரூ.26.30 லட்சம் மதிப்பிலான 555 கிராம் தங்கம் கடத்தி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார், கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்து அவர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
