திருச்சியில் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்:

0
1

திருச்சியில் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்:

திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் வரும் (08.10.2021) வெள்ளிக்கிழமை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது .

இவ்வேலைவாய்ப்பு முகாமில் தனியார்துறை நிறுவனங்களில் பல்வேறு பணியிடங்களுக்கு பணிவாய்ப்புகளை வழங்கபட உள்ளது . இவ்வேலைவாய்ப்பு முகாமில் பத்தாம் வகுப்பு , பன்னிரெண்டாம் வகுப்பு , பட்டப்படிப்பு மற்றும் தொழில்பயிற்சி (டர்னர் , வெல்டர் & பிட்டர் ) முடித்த அனைவரும் ( வயது வரம்பு 18 – க்கு மேல் 35 – க்குள் ) கலந்துகொள்ளலாம்.

2

மேற்படி நேர்காணலில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்களது அனைத்து கல்வி சான்றிதழ்களின் நகல் , சுயவிபரக்குறிப்பு ( Resume ) , ஆதார் அட்டை நகல் மற்றும் 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் கலந்து கொள்ள வேண்டும் .

தனியார்துறையில் வேலைவாய்ப்பு பெற விரும்பும் இளைஞர்கள் 08.10.2021 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் வந்து கலந்து கொண்டு பயன்பெறலாம் .

இத்தகவலை திருச்சி மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு, இ.ஆ.ப. , தெரிவித்துள்ளார்.

3

Leave A Reply

Your email address will not be published.