திருச்சியில் கல்லூரி மாணவி தற்கொலை வழக்கில் 2 பேர் கைது:

0
1

திருச்சியில் கல்லூரி மாணவி தற்கொலை வழக்கில் 2 பேர் கைது:

திருச்சி தென்னூர் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் மகள் சங்கீதா (20). தனியார் கல்லூரியில் இளங்கலை மூன்றாமாண்டு படித்து வந்தார். இவர் அப்பகுதியை சேர்ந்த சரவண குமார் என்பவரை காதலித்து வந்துள்ளார்.

இந்நிலையில், சரவணக்குமாரிடம் திருமணம் செய்துகொள்ள கேட்டுள்ளார். இதற்கு சரவணகுமார் மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் கடந்த இரு நாட்களாக மிகுந்த மன உளைச்சலில்  இருந்த சங்கீதா நேற்று முன்தினம் (4/10/2021) வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

4
2

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் சங்கீதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனைக்கு பின் சங்கீதாவின் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பெற்றோர் உடலை வாங்க மறுத்து அரசு மருத்துவமனையில் மறியலில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து சங்கீதாவின் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதியளித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

இந்நிலையில் போலீசார் சங்கீதாவை தற்கொலைக்கு தூண்டியதாக சரவணகுமார் அவரது தந்தை மூர்த்தி உட்பட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து நேற்று முன்தினம் மூர்த்தியை கைது செய்தனர். அதை தொடர்ந்து நேற்று காதலன் சரவணக்குமார் கைது செய்தனர். மேலும் இச்சம்பவத்தில் தொடர்புடைய 3 பேரை தேடி வருகின்றனர்.

3

Leave A Reply

Your email address will not be published.