திருச்சியில் சிறுமியை திருமணம் செய்த வாலிபர் போக்சோவில் கைது:

0
1

திருச்சியில் சிறுமியை திருமணம் செய்த வாலிபர் போக்சோவில் கைது:

திருச்சி எடமலைப்பட்டிபுதூர் இந்திரா நகரைச் சேர்ந்தவர் தங்கராஜ். இவரது மகன் வீரமணி 21 கூலித் தொழிலாளியான இவர் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி காதலித்து வந்தார்.

இந்நிலையில்,  இருவீட்டாரும் இவர்களுக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்தனர். இதுகுறித்து தகவலறிந்த சைல்டு லைன் அமைப்பினர் சிறுமியை மீட்டு குழந்தைகள் நல காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

2

மேலும் சிறுமியின் பெற்றோருக்கு  மகளுக்கு 18 வயது பூர்த்தியான பிறகு திருமணம் செய்து வைக்க வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டது. மேலும் குழந்தைகளை காப்பகத்திற்கு மாதம் ஒரு முறை திரும்பி வந்து கையெழுத்திட வேண்டும் என கூறி அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் கடந்த மூன்று மாதங்களாக சிறுமி கையெழுத்து கூட குழந்தைகளை காப்பகத்திற்கு வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த அதிகாரிகள் சிறுமியின் வீட்டுக்கு சென்று பார்த்த போது, சிறுமிக்கு திருமணம் ஆகி அவர் இரண்டு மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து 15 வயது சிறுமியை திருமணம் செய்து கர்ப்பம் ஆக்கிய வீரமணியை மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

3

Leave A Reply

Your email address will not be published.