திருச்சி ஆவின் ஊழியர் தற்கொலை:

0
1

திருச்சி ஆவின் ஊழியர் தற்கொலை:

திருச்சி திருவெறும்பூர் அடுத்த துவாக்குடி மேலத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் சிவபாலன் (25). இவர் திருச்சி ஆவின் பால் பூத் ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.

2

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு பெற்றோருக்கும் சிவபாலனுக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த சிவபாலன் வீட்டை விட்டு வெளியேறினார். நீண்ட நேரம் ஆகியும் சிவபாலன் வீடு திரும்பவில்லை.

4

இந்நிலையில் ராவுத்தர் மேடு அருகே உள்ள கிணற்று பகுதியில் சிவபாலனின் செல்போன், டூவீலர் இருப்பதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை மேற்கொண்டனர்.

இச்சோதனையில்,  சிவபாலன் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதனையடுத்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

3

Leave A Reply

Your email address will not be published.