திருச்சியில் கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு தங்க நாணயம் பரிசு:

0
1

திருச்சியில் கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு தங்க நாணயம் பரிசு:

கொரோனா தொற்றை எதிர்கொள்ள தமிழகம் முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

திருச்சி மாநகராட்சியில் இரண்டாவது கட்டமாக மாபெரும் தடுப்பூசி முகாம் கடந்த 26ந்-தேதி நடைபெற்றது. தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் ஆர்வத்தை மக்களிடையே ஏற்படுத்தும் விதத்தில் கடந்த 26ந்-தேதி நடைபெற்ற முகாமில் தடுப்பூசி செலுத்திக் கொண்டு 30 பேர் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு நேற்று (2.10.202) பரிசுகள் வழங்கப்பட்டது.

2

இதில் முதல் பரிசாக தங்க நாணயம் வழங்கப்பட்டது. இரண்டாவது பரிசாக சைக்கிள் மற்றும் மூன்றாம் பரிசாக பட்டுப்புடவை வழங்கப்பட்டது. மேலும் 27 பேருக்கு ரூ.1000 மதிப்புள்ள மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி சுகாதார அலுவலர் இளங்கோவன், உதவி செயலாளர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

3

Leave A Reply

Your email address will not be published.