திருச்சியில் ஓடும் பேருந்தில் பணம் திருட்டு: பஸ்ஸை சிறைப்பிடித்த பயணிகள்:

0

திருச்சியில் ஓடும் பேருந்தில் பணம் திருட்டு: பஸ்ஸை சிறைப்பிடித்த பயணிகள்:

திருச்சி துப்பாக்கி தொழிற்சாலையில் இருந்து சத்திரம் பேருந்து நிலையத்திற்கு வந்த அரசு பேருந்தில் நேற்று (2/10/2021) பயணம் செய்த பெண் பயணிகளிடம் அடையாளம் தெரியாத நபர் பணம் திருடியது தெரியவந்தது.

பணம் திருடப்பட்டதை அறிந்த பெண் பயணிகள் பேருந்தை காவல் நிலையத்தில் நிறுத்தும்படி ஓட்டுனர் மற்றும் நடத்துனரிடம் கூறியுள்ளனர்.

ஆனால், பெண் பயணிகள் கூறியதைக் கேட்காமல், ஓட்டுனர் பேருந்தை இயக்கிதாகவும், மேலும் நடத்துனர் பெண்களை தகாத வார்த்தையால் திட்டியதாக கூறப்படுகிறது.

இதில் ஆத்திரமடைந்த பயணிகள் ஒன்று சேர்ந்து பேருந்தை சிறைபிடித்தனர். கூட்டம் கூடுவதை கண்டு பயந்த டிரைவர் மற்றும் நடத்துனர் அங்கிருந்து தப்பியோடினர்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்தனர். மேலும் இது குறித்து வழக்குபதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.