திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில்  கைவினை பொருட்கள் கண்காட்சி:

0
1

திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் கைவினை பொருட்கள் கண்காட்சி:

திருச்சி மாநகராட்சி சார்பில் நடைபெறும் 75வது சுதந்திர திருநாள் அமுத பெரு விழா நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, திருச்சி மாநகராட்சி மைய அலுவலகத்தில், குப்பை கழிவுகளிலிருந்து மறுசுழற்சி செய்யப்பட்டு பயன்படுத்தப்படும் கைவினை பொருட்கள் கண்காட்சி நடைபெற்றது.

இக்கண்காட்சியை நகர பொருளாளர் அமுதவல்லி தொடங்கி வைத்தார். செயற்பொறியாளர்கள் சிவபாதம் குமரேசன் உதவி ஆணையர்கள்  மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

2

இக்கண்காட்சியில் தன்னார்வலர்கள், கைவினைக் கலைஞர்கள், பெண்கள் ஆகியோர் கலந்து கொண்டு தேவையற்ற குப்பை கழிவுகளிலிருந்து உருவாக்கப்பட்ட பைகள், பொம்மைகள், அழகுப் பொருள்கள் ஆகிய தங்களுடைய படைப்புகளை பொதுமக்களின் பார்வைக்காக வைத்திருந்தனர்.

3

Leave A Reply

Your email address will not be published.