திருச்சியில் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம்: 1 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு:

0
1

திருச்சியில் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம்: 1 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு:

திருச்சி மாவட்டத்தில் இன்று (3/10/2021) மூன்றாவது கட்டமாக மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட உள்ளது.

இது குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று (2/10/2021) திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மூன்றாவது கட்டமாக நடத்தப்படும் இந்த தடுப்பூசி முகாமில் 1 லட்சத்திற்கும் அதிகமான நபர்களுக்கு தடுப்பூசி செலுத்த  இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

2

மேலும் கடந்த 26ஆம் தேதி நடைபெற்ற தடுப்பு முகாம்களில் சிறப்பாக பணியாற்றிய முசிறி, லால்குடி பேரூராட்சிகள், துவாக்குடி நகராட்சி, மண்ணச்சநல்லூர், லால்குடி, திருவரம்பூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கான பாராட்டுச் சான்றிதழ், கேடயத்தை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

மேலும் மாநகராட்சியில் சிறப்பாக பணியாற்றிய பொன்மலை கோட்டம்,  லால்குடி அரசு மருத்துவமனை, அதிக தடுப்பூசி செலுத்திய 14 மைய குழுக்களுக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

மேலும் இந்த மூன்றாவது கட்ட முகாமிற்கு அதிகாரிகள் ஒத்துழைப்பு தருமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டார். மேலும்,  மக்களின் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக அதிக இடங்களில் இன்று (3/10/2021) தடுப்பூசி முகாம் நடத்த உத்தரவிட்டுள்ளார்.

3

Leave A Reply

Your email address will not be published.