திருச்சியில் கத்தியை காட்டி செல்போன் பறித்தவர்கள் கைது:

0
1

திருச்சியில் கத்தியை காட்டி செல்போன் பறித்தவர்கள் கைது:

திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியை சேர்ந்தவர் பாலசுந்தர் (25). இவர் நேற்று முன்தினம் அடையவளஞ்சான் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக 2 பைக்குகளில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் பாலச்சந்தரிடம் கத்தியை காட்டி மிரட்டி அவரது செல்போனை பறித்து சென்றனர்.

இதுகுறித்து ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் பாலசந்தர் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

2

விசாரணையில் பாலச்சந்தரிடம் செல்போனை பறித்து சென்ற ஸ்ரீரங்கம் கோவில் தெருவைச் சேர்ந்த மாதேஷ்வரன் (19), ராமச்சந்திரன் (21), ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.

3

Leave A Reply

Your email address will not be published.