திருச்சி அருகே சிறுமியை கடத்திய 5 பேர் கைது:

0
1

திருச்சி அருகே சிறுமியை கடத்திய 5 பேர் கைது:

துறையூர் அருகே பள்ளிக்கு சென்ற 16 வயது சிறுமியை காணவில்லை என பெற்றோர் போலீசில் புகார் அளித்திருந்தனர்.

2

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போது,  வெங்கடாசலபுரத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் புகழேந்தி (21) என்பவர் நண்பர்களுடன் சேர்ந்து சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்தது தெரியவந்ததது.

4

இதனையடுத்து சிறுமியை திருமணம் செய்த புகழேந்தி (21), மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த விஷ்ணு (21), பாரத் (21), சுப்பிரமணி (43), விஜயகுமார் (37) உட்பட 5 பேரையும் போலீசார் கைது செய்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் காவல்துறையினர் சிறுமியை மீட்டு திருச்சியில் உள்ள காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.

 

3

Leave A Reply

Your email address will not be published.