குடியிருந்த வீடு இலவச மருத்துவமனையாக மாற்றம் கவி குரூப்ஸ் சேர்மன் சந்திரபாபுவின் மனிதநேயம்
குடியிருந்த வீடு இலவச மருத்துவமனையாக மாற்றம் கவி குரூப்ஸ் சேர்மன் சந்திரபாபுவின் மனிதநேயம்
திருச்சியில் கவி மருத்துவமனை மற்றும் நியூரோ பவுண்டேஷன், கவி நர்சிங் ஹோம், கவி பர்னிச்சர், கவி அக்ரோஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் கவி குரூப்ஸ் நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. இதன் தலைவராக சந்திரபாபு உள்ளார். திருச்சி, பாலக்கரை, காஜாபேட்டை, பூந்தோட்டம் மோட்ச இராக்கினி ஆலயம் எதிரில் உள்ள செங்குளம் காலனி பகுதியில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருந்த தனது வீட்டை இலவச மருத்துவமனையாக மாற்ற வேண்டும் எனலட்சியம் கொண்டு அதை நிகழ்த்தியும் காட்டியுள்ளார்.
கவி நர்சிங் ஹோம் என்ற பெயரில் உள்ள இம்மருத்துவமனையில் பொது நல மருத்துவர் டாக்டர் சுஜித் சந்திரபாபு தலைமையில் ஏழை எளிய மக்களுக்கு இலவச சிகிச்சை மற்றும் ரத்தப் பரிசோதனை, சர்க்கரை பரிசோதனை, கொலஸ்ட்ரால் பரிசோதனை உள்ளிட்டவை தினமும் இலவசமாக மேற்கொள்ளப்படுகிறது. மருந்து மாத்திரைகளுக்கு மட்டும் 10 சதவீத தள்ளுபடி வழங்கும் திட்டத்தை செயல்படுத்தியுள்ளார்.
இங்கு கடந்த 26ம் தேதி இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமை கவி குரூப் சேர்மன் சந்திரபாபு தொடங்கி வைத்தார். தீராத வயிற்று வலி, நீரிழிவு நோய், நீரிழிவு கால் புண், பெண்கள் சம்பந்தப்பட்ட ஆலோசனை, பொது மருத்துவம், ஆஸ்துமா, நெஞ்சு சளி, தூக்கமின்மை, குழந்தைகளுக்கான மருத்துவ ஆலோசனை உள்ளிட்டவை வழங்கப்பட்டது. இம்மருத்துவ முகாமில் இலவசமாக ரத்த அழுத்த பரிசோதனை, சர்க்கரை அளவு கண்டறிதல், ஹீமோகுளோபின் பரிசோதனை, ஈசிஜி, உடல் எடை உயரம் பருமன் போன்றவையும் இலவசமாக பரிசோதனை செய்யப்பட்டது.
மகளிர் மற்றும் பொதுநல மருத்துவரும், அறுவை சிகிச்சை நிபுணருமான டாக்டர் பிரியா, பச்சிளம் மற்றும் குழந்தைகள் நல மருத்துவர் அக்னீஸ்வரன் ஆகியோர் நோயாளிகளுக்கு பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர். காலை 7 மணி தொடங்கி மதியம் 2 மணி வரை நடைபெற்ற இந்த இலவச மருத்துவ முகாமின் மூலம் ஏராளமானோர் பலனடைந்தனர்
கவி மருத்துவமன நியூரோ பவுண்டேஷன் மற்றும் முதியோர் இல்லம் மற்றும் வ்ருத்தாஸ்ரம் மாற்றுத் திறனாளிகளுக்கான மறுவாழ்வு மையம் ஆகியவை இணைந்து தண்டுவடம் காயமடைந்தோருக்கான இலவச மருத்துவ முகாமை செப்டம்பர் 26 அன்று நடத்தியது. கவி மருத்துவமனை பொது நல மருத்துவர் டாக்டர் சுஜித்சந்திரபாபு தலைமையில் நடைபெற்ற இம்முகாமை கவி குரூப்ஸ் சேர்மன் சந்திரபாபு தொடங்கி வைத்தார். மூளை நரம்பியல் மற்றும் தண்டுவட அறுவைச்சிகிச்சை நிபுணர் அருண் பிரசன்னா, சிறுநீரக மாற்று அறுவைச்சிகிச்சை நிபுணர் அருண்குமார், கதிரியக்க நிபுணர் இளம்வழுதி ஆகியோர் சிகிச்சை அளித்தனர்.
தண்டுவடம் பாதிக்கப்பட்ட ஐம்பதுக்கும் அதிகமானோர் இம்முகாமில் பங்கேற்று, பரிசோதனை மற்றும் சிகிச்சை பெற்றனர். இம்முகாமில் ஸ்ரீ பவுண்டேசன் நிர்வாக அறங்காவலர் கிருஷ்ணன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சந்திரமோகன் மற்றும் தண்டுவடம் பாதித்தவர்களுக்கான அமைப்பின் நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.