திருச்சியில் வரும் அக்.6-ல் அஞ்சல் சேவை குறைதீர் முகாம்:

0
1

திருச்சியில் வரும் அக்.6-ல் அஞ்சல் சேவை குறைதீர் முகாம்:

திருச்சி தலைமை அஞ்சல் நிலைய வளாகத்தில் உள்ள மத்திய மண்டல அஞ்சல் துறைத் தலைவர் அலுவலகத்தில், அக்.6-ம் தேதி காலை 11 மணியளவில் மண்டல அளவிலான அஞ்சல் சேவை குறைதீர் முகாம் நடைபெறவுள்ளது. எனவே, அஞ்சல் சேவை தொடர்பான குறைகளை செப்.30-ம் தேதிக்குள் அனுப்பலாம்.

கோட்ட அளவில் ஏற்கனவே புகார் மனு கொடுத்து, கிடைக்கப் பெற்ற பதிலில் திருப்தி அடையாதவர்கள் மட்டுமே இந்த குறைதீர் முகாமுக்கு குறைகளை அனுப்பி வைக்க வேண்டும்.
குறைகளை நா.ராஜகோபாலன், உதவி இயக்குநர் (காப்பீடு மற்றும் புகார்), அஞ்சல் துறைத் தலைவர் அலுவலகம், மத்திய மண்டலம், திருச்சி–1 என்ற முகவரிக்கு அஞ்சல் உறையின் முன்பக்க மேற்பகுதியில் அஞ்சல் சேவை குறைதீர் முகாம்-செப்டம்பர் 2021 என்று குறிப்பிட்டு அனுப்ப வேண்டும்.

2

மேலும் கொரோனா பரவாமல் தடுக்கும் நோக்கில் அஞ்சல் சேவை குறைதீர் முகாமை கூகுள் மீட் அழைப்பு மூலம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால் தங்களின் தற்போதைய முகவரி, செல்போன் எண், மின்னஞ்சல் முகவரி மற்றும் அருகிலுள்ள அஞ்சலக முகவரி ஆகியவற்றையும் தவறாமல் குறிப்பிட்டு அனுப்பவும். இவ்வாறு அஞ்சல் துறை மத்திய மண்டலத் தலைவர் அ.கோவிந்தராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3

Leave A Reply

Your email address will not be published.