சென்னையில் கொள்ளையில் ஈடுபட்ட நபர் திருச்சியில் கைது: சினிமா பாணியில் விரட்டி பிடித்த போலீசார்:

0
1

சென்னையில் கொள்ளையில் ஈடுபட்ட நபர் திருச்சியில் கைது: சினிமா பாணியில் விரட்டி பிடித்த போலீசார்:

சென்னை படப்பை அண்ணாநகரைச் சேர்ந்தவர் தவமணி மகன் ரவுடி வினோத்குமார் (21).  இவர் சென்னை முடிச்சூர் பீர்க்கன்கரணை காவல் நிலையப் பகுதிக்கு உட்பட்ட பகுதியில் வீட்டின் கதவை உடைத்து, நகை பணத்தை கொள்ளையடித்து விட்டு, ஏர்போர்ட்டில் நின்றிருந்த காரை திருடிக் கொண்டு திருச்சி வந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து, சென்னை போலீசார் இதுகுறித்த தகவலை வாகன சோதனை சாவடிகளில் அளித்து வினோத்குமாரை பிடிக்க முயற்சித்தனர். ஆனாலும் முடியவில்லை.  தப்பிச் சென்ற காரின் ஜிபிஎஸ் கருவி மூலம் ஆய்வு மேற்கொண்டபோது வினோத்குமார்  கார் திருச்சி வழியே மதுரைக்கு சென்று கொண்டிருப்பது தெரியவந்தது.  இதுகுறித்து திருச்சி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

4
2

இதனையடுத்து திருச்சி மாநகர கமிஷனர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில், போலீசார் சென்னை சஞ்சீவி நகர் அருகே பேரிகார்டுகள் அமைத்து வினோத்குமாரை தடுத்து நிறுத்த முயன்றனர்.

இந்நிலையில் 4.30 அளவில் சஞ்சீவி நகர் அருகே காரில் வந்த ரவுடி போலீசாரை கண்டு, அங்கு வைத்திருந்த தடுப்புகளை இடித்து தள்ளி தப்பினார்.

இதையடுத்து தயாராக இருந்த போலீசார், ரவுடியின் வாகனத்தை விரட்டி பஞ்சப்பூர் அருகே மறித்து பிடித்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, வினோத் குமாரை கைது செய்தனர்.

3

Leave A Reply

Your email address will not be published.