பெண்களால் நடத்தப்படும் கார் உதிரிபாகங்கள் விற்பனை நிலையம்

0

பெண்களால் நடத்தப்படும் கார் உதிரிபாகங்கள் விற்பனை நிலையம்

கார், ஆட்டோவைத் தாண்டி பேருந்து, லாரி போன்ற கனரக வாகனங்களை இயக்க பெண்கள் முன்வரும் இந்நேரத்தில் திருச்சியில் பெண் ஒருவர் கார் அக்சசரீஸ் வர்த்தகத்தில் ஈடுபடுவது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

பொருளாதார தேவைக்காக கார் அக்சசரீஸ் விற்பனை செய்யும் ஷோரூமில் 15 வருடங்களுக்கு முன்பு மேலாளராக பணியைத் தொடங்கிய யோகேஸ்வரி என்பவர், பணி அனுபவம் மூலம் திருச்சி, சோனா மீனா தியேட்டர் எதிரே அகில் கார் டெக்கர்ஸ் ஆட்டோ மொபைல் ஸ்பேர்பார்ட்ஸ் கடை ஒன்றை தொடங்கி நடத்தி வருகிறார். உரிமையாளர் யோகேஸ்வரியை சந்தித்து பேசினோம். அப்போது அவர், “கார் அக்சசரீஸ் விற்பனை யில் எனக்கு ஏற்பட்ட அனுபவம் தான் தனியாக ஒரு கடையை திறக்கும் உத்வேகத்தை தந்தது.

சிறிய முதலீடு கொண்டு இந்த கடையை தொடங்கினேன். எங்களுக்கு பெரிய இலாபம் தேவையில்லை அதனால் குறைந்த விலையிலேயே கொடுத்து வருகிறோம். இதனால் வாடிக்கையாளர்கள் தொடர்ந்து தேடி வருகின்றனர். ஏற்கனவே பழக்கமான மெக்கானிக் குகள் எங்கள் விற்பனைக்கு கை கொடுக்கின்றனர். எங்களுக்கு பழக்கமான மெக்கானிக்குகள் மற்ற மெக்கானிக்குகளிடம் பரிந்து ரைப்பதும் எங்கள் விற்பனைக்கு உறுதுணையாக அமைகிறது. கொள்முதலிற்கு என் கணவர் உதவியாக செயல்படுகிறார்.

மேலும் என் கடையில் பணிபுரியும் அனைவரும் பெண்கள் தான். காருக்குத் தேவையான
REMOTE & SECURITY SYSTEM, HORN, HEAD LIGHT FITTINGS, FULL FLOOR MAT, POWER WINDOW, CAR SEAT COVERS, ALLOY WHEEL, CARRIER, CAR AUDIO SYSTEM உட்பட ஒட்டு மொத்த காருக்கான தேவையான அனைத்து உதிரி பாகங்களும் விற்பனை செய்கிறோம்”.

Leave A Reply

Your email address will not be published.