திருச்சி அருகே சொத்து தகராறில் மகளுக்கு அரிவாள் வெட்டு: தந்தை தற்கொலை:

0
1

திருச்சி அருகே சொத்து தகராறில் மகளுக்கு அரிவாள் வெட்டு: தந்தை தற்கொலை:

திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை அடுத்துள்ள அல்லித் துறை பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி (71) விவசாயி. இவருக்கு 2 மனைவிகள் உள்ளனர். இவரது முதல் மனைவி பிருந்தாதேவி இவருக்கு அருள் ராஜன் (42) என்ற மகன் உள்ளார்.

2

இவரது இரண்டாவது மனைவி லதா (57) இவருக்கு பிரபாகரன்(32) என்ற மகனும் கீர்த்தனா (27) என்ற மகளும் உள்ளனர்.

4

இந்நிலையில் இரண்டு குடும்பத்தினருக்கும் இடையே சொத்து தகராறு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று (30/09/2021) மூர்த்தி அவரது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்துள்ளார். மேலும் அவரது மகள் கீர்த்தனா வெட்டு காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சொத்து தகராறு காரணமாக யாரேனும் கொலை செய்துள்ளார்களா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

3

Leave A Reply

Your email address will not be published.