விவசாயி கொலை வழக்கில் 10 பேருக்கு ஆயுள்: திருச்சி கோர்ட்டு தீர்ப்பு:

0
1

விவசாயி கொலை வழக்கில் 10 பேருக்கு ஆயுள்: திருச்சி கோர்ட்டு தீர்ப்பு:

திருச்சி பிராட்டியூர் பகுதியை சேர்ந்தவர் சங்கர் மற்றும் இவரது நண்பர் சந்தோஷ்  கடந்த 2013 ஆம் ஆண்டு தீரன்நகர் மெயின் ரோட்டில் பைக்கில் சென்றபோது அவ்வழியாக வந்த டிராக்டர் பைக் மீது உரசுவது போல் சென்றதாக தகராறு ஏற்பட்டது. இதில் தடுக்க வந்த உணவக உரிமையாளர்  ராம்ஜி நகர் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் (35) என்பவரை சங்கரின் நண்பர்கள், உறவினர் மாமலைவாசன் உள்ளிட்ட 5 பேர்  தாக்கி அவரது உணவகத்தை சேதப்படுத்தினர்.

2

இதனையடுத்து இதற்கு பதிலடியாக ராஜேந்திரன் நண்பர்கள் 10 பேர் கொண்ட கும்பல் மாமலை வாசனின் ஆதரவாளரான  விவசாயி பாலசுப்ரமணியமன் (60) ஆறுமுகம் (46)  ஆகியோரை அரிவாளால் தாக்கினர். அதில் பாலசுப்பிரமணியம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் ஆறுமுகம் படுகாயம் அடைந்தார்.

4

இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கொலை சம்பவத்தில் ஈடுபட்ட ராம்ஜிநகர் கே. கள்ளிக்குடி வடக்குத் தெருவைச் சேர்ந்த மூ.ராஜமாணிக்கம் ( 23 ) , அதே பகுதியைச் சேர்ந்த நண்பர்களான சங்கர் ( 24 ) , தர்மா என்கிற தர்மராஜ் 23 ) , மோகன் என்கிற நீலமேகம் ( 25 ) , சம்பத் என்கிற சம்பத்குமார் ( 260 மணிவேல் ( 28 ) , பிரபு ( 24 ) , மோகன்ராஜ் ( 24 ) , ஜம்புலிங்கம் என்கிற நீல மேகம் ( 25 ) , மயிலாடுதுறை வடிவேல் ( 31 ) ஆகிய 10 பேர் கைது செய்தனர். மேலும் இது குறித்த விசாரணை திருச்சி மாவட்ட 3வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி தங்கவேல் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட 10 பேருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் ரூ.5000 அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

3

Leave A Reply

Your email address will not be published.