மது பழக்கத்தை விடமுடியாமல் முதியவர் தூக்கிட்டு தற்கொலை:

0

மது பழக்கத்தை விடமுடியாமல் முதியவர் தூக்கிட்டு தற்கொலை:

முசிறி மேலசாலியர் தெருவை சேர்ந்தவர் வினையத்தான் (56), இவர் மதுபழக்கத்திற்கு அடிமையாகி உள்ளார். இதனால் வீட்டில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

வீட்டில் பலமுறை குடியை  நிறுத்துமாறு குடும்பத்தினர் வற்புறுத்தி உள்ளனர். ஆனால் குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால், விடமுடியாமல் மன வேதனையில் வீட்டை விட்டு வெளியேறி உள்ளார்.

இந்நிலையில் மிகுந்த மன உளைச்சலில் இருந்த வினையத்தான் முசிறி பரிசல் துறை ரோடு கன்னிமார் கோவில் பின்புறமுள்ள வாய்க்கால் கரையில் மரத்தில் நேற்று (29/09/2021)  தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Leave A Reply

Your email address will not be published.