திருச்சி மாநகரின் குற்ற சம்பவங்களை தடுக்க மாநகர கமிஷனர் ஆட்டோ டிரைவர்களுடன் ஆலோசனை:

0
1

திருச்சி மாநகரின் குற்ற சம்பவங்களை தடுக்க மாநகர கமிஷனர் ஆட்டோ டிரைவர்களுடன் ஆலோசனை:

திருச்சி மாநகரில் குற்ற சம்பவங்களை தடுக்கும் நோக்கில் காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அந்த வகையில் குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட ரவுடிகள் அதிரடியாக கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

2

மேலும் குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பதற்காக யாரேனும் ஆயுதங்களுடனும் அல்லது சந்தேகப்படும்படியாக தெரியும் நபர்களை பிடிக்க ஆட்டோ டிரைவர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

4

இந்த ஆலோசனை கூட்டத்தில் மாநகர கமிஷனர் கார்த்திகேயன் அந்தந்த காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஆட்டோ ஓட்டுநர்களை ஒருங்கிணைத்து, குற்ற சம்பவங்களில் ஈடுபடும் நபர்கள், சந்தேகப்படும் படியாக ஆயுதங்களுடன் திரியும் நபர்கள், ஏதேனும் அசம்பாவிதம் செய்யும் குற்றம் நோக்கத்துடன் பேசிக் கொண்டு பயணம் செய்யும் நபர்கள் குறித்த தகவலை உடனடியாக தெரிவிக்கும்படி அறிவுறுத்தினார்.

இந்த ஆலோசனை கூட்டமானது திருச்சி மாநகரில் 26 இடங்களில் நடைபெற்றது. இதில் ஏராளமான ஆட்டோ டிரைவர்கள் கலந்து கொண்டனர்.

3

Leave A Reply

Your email address will not be published.