பாரதி நினைவு நூற்றாண்டு விழாக் கருத்தரங்கம்

0

பாரதி நினைவு நூற்றாண்டு விழாக் கருத்தரங்கம்

திருச்சிராப்பள்ளி, தூய வளனார் கல்லூரியின் தமிழாய்வுத் துறையின் சார்பாக பாரதி நினைவு நூற்றாண்டு விழாக் கருத்தரங்கம் “பாரதியின் பன்முக ஆளுமை” என்னும் பொருண்மையில் இணையவழியில் நடைபெற்று வருகிறது.

கல்லூரி முதல்வர் அருள்முனைவர் ம.ஆரோக்கியசாமி சேவியர், சே.ச. இக்கருத்தரங்கிற்குத் தலைமை வகித்து தொடங்கி வைத்தார். தம் தலைமையுரையில் பாரதியின் நினைவு  நூற்றாண்டை கருத்தில் கொண்டு இக்கருத்தரங்கை ஏற்பாடு செய்துள்ள தமிழாய்வுத் துறையினரை வாழ்த்தினார்.

தமிழாய்வுத் துறைத்தலைவர் முனைவர் ஞா.பெஸ்கி வரவேற்புரையாற்றினார். கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் முனைவர் ஆ.இராஜாத்தி கருத்தரங்க அறிமுக உரை நிகழ்த்துகிறார்.  பாரதியின் பாடல் வரிகளில் சிலவற்றை பாமாலையாகத் தொகுத்து ஆற்றிய உரை சிறப்பாக அமைந்தது.

புதுச்சேரி காஞ்சி மாமுனிவர் அரசினர் பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவன தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் சிவ.மாதவன் “மானுடம் போற்றும் மாண்பு” என்கிற மையப் பொருளில் உரையாற்றினார். அவருடைய உரையில் பாரதியாரின் வாழ்க்கையில் நடைபெற்ற எண்ணற்ற நிகழ்வுகளை எடுத்துக்கூறி பாரதியின் பன்முக ஆளுமைகளை அவர் எழுத்துக்களை மேறகோளிட்டு உரையாற்றினார். சொல் வேறு வாழ்வு வேறு என்று இல்லாமல் சொல்லும் செயலும் ஒன்றே என வாழ்ந்தவர் பாரதி என்பதை பல்வேறு நிகழ்வுகளைத தம் உரையில் எடுத்துக்காட்டினார்.

தொடர்ந்து புதுச்சேரி பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியில் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் சொ.சேதுபதி “தன்னுயிர்போல் மன்னுயிர் பேணும் தகைமை” என்னும் மையப் பொருளில் உரையாற்றி வருகிறார்.

 

கருத்தரங்க நிறைவில் தமிழ்த்துறை இரண்டின் ஒருங்கிணைப்பாளர் திருமதி. சி.பாக்கிய செல்வ ரதி நன்றியுரை நிகழ்த்துகிறார்.

மூன்றாம் ஆண்டு இளங்கலைத் தமிழ் மாணவர் செல்வன் பி.லீ.தயாநிதி நிகழ்ச்சியை நெறியாள்கை செய்கிறார்.

பேராசிரியர்கள், முனைவர் பட்ட ஆய்வாளர்கள், தமிழிலக்கிய மாணவர்கள், தமிழார்வலர்கள், கவிஞர்கள், பாரதி பற்றாளர்கள் உள்பட 183 பங்கேற்பாளர்கள் பங்கேற்று வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.