திருச்சயில் கஞ்சா, லாட்டரி விற்ற 16 பேர் அதிரடி கைது:

0

திருச்சயில் கஞ்சா, லாட்டரி விற்ற 16 பேர் அதிரடி கைது:

திருச்சியில் கஞ்சா, மற்றும் லாட்டரி சீட்டுகள் விற்பனையை தடுக்க மாநகர கமிஷனர் கார்த்திகேயன் உத்தரவின்பேரில், தனிப்படை போலீசார் அமைக்கப்பட்டு திருச்சி மாநகரின் பல்வேறு பகுதிகளில் நேற்று (29.09.2021) சோதனை மேற்கொண்டப்பட்டது.

இச்சோதனையில்,  லாட்டரி சீட்டுகள் விற்றதாக ஸ்ரீரங்கம் வீரேஸ்வரத்தை சேர்ந்த சுரேஷ் (வயது 41), கீழ சிந்தாமணியை சேர்ந்த லட்சுமணன் (35), கீழ தேவதானத்தை சேர்ந்த பிரபு (34), எடத்தெருவை சேர்ந்த ஜெகதீசன் (47), வரகனேரியை சேர்ந்த முகமது ஹாஜீர் உசேன் (24), குமார் (36), சக்திவேல் (37), முகமது இஸ்மாயில் (28),ரமேஷ் (32), ராஜா (37), செல்வகுமார் (44), வெள்ளநிதி (34) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இதேபோல், கஞ்சா விற்பனையில் ஈடுப்பட்ட அம்மாமண்டபம் புதுத்தெருவை சேர்ந்த சுதாகர் (36), தெப்பக்குளம் 3-வது தெருவை சேர்ந்த ஹரிஹரசுதன் (24), சரவணன் (22), சூர்யா (20) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.11 ஆயிரம் மதிப்பிலான 1 கிலோ 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.