மூத்த பத்திரிகையாளர் எம்.சுப்ரமணியன் காலமானார்

0

மூத்த பத்திரிகையாளர் எம்.சுப்ரமணியன் காலமானார்

மாலைச்சுடர் நாளிதழின் ஆசிரியர் எம்.சுப்ரமணியன் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று (செப்டம்பர் 29) மதியம் 2:30 மணியளவில் இயற்கை எய்தினார்.

அலை ஓசை, தினசரி, மக்கள் குரல், நியூஸ் டுடே, மாலைச்சுடர் உள்ளிட்ட நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார்.அகில இந்திய வானொலி, தூர்தர்சன் ஆகியவற்றிலும் பணியாற்றிய அனுபவம் உடையவர்.

பத்திரிகை துறையில் 50 ஆண்டுகால அனுபவத்தை நெருங்கி கொண்டிருந்தவர். செய்தியாளர், சிறப்புச் செய்தியாளர், ஆசிரியர் என பல்வேறு பொறுப்புகளில் திறன்பட பணியாற்றியவர்

இவருக்கு மனைவி, ஒரு மகன், இரு மகள்கள் உள்ளனர்.புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டையில் பிறந்தவர்.

Leave A Reply

Your email address will not be published.