திருச்சியில் ரூ.30 1/2 லட்சம் மதிப்பிலான கடத்தல் புகையிலை பொருட்கள் பறிமுதல்:

0
1

திருச்சியில் ரூ.30 1/2 லட்சம் மதிப்பிலான கடத்தல் புகையிலை பொருட்கள் பறிமுதல்:

திருச்சி மாநகரில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து திருச்சிக்கு காய்கறி ஏற்றி வரும் வண்டிகள் மூலம் புகையிலைப் பொருள்கள் கடத்தி வரப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் அமைக்கப்பட்டு வாகன சோதனையில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இதனையடுத்து மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் உத்தரவின்பேரில் தனிப்படை போலீசார் மற்றும் கோட்டை காவல் நிலைய போலீசார் நேற்று (29/09/2021) சென்னை தேசிய நெடுஞ்சாலை சஞ்சீவி நகர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

2

அப்போது அவ்வழியாக காய்கறி ஏற்றி கர்நாடக பதிவு எண்ணுடன் வந்த சரக்கு வாகனத்தில் ரூபாய் 30.50 லட்சம் மதிப்பிலான குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை கடத்தி இது தெரியவந்தது.
இதனையடுத்து அவற்றை பறிமுதல் செய்த காவல்துறையினர் வாகனத்தை ஓட்டி வந்த மைசூரைச் சேர்ந்த மனோஜ் குமார் (26), சோமுசேகர் (22) ஆகிய இரண்டு பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

போலீசாரின் விசாரணையில் கடத்தி வரப்பட்ட புகையிலை பொருள்கள் தஞ்சாவூர் சாலை, அரியமங்கலம் ஆகிய பகுதிகளுக்கு விநியோகிப்பதற்காக கொண்டு வரப்பட்டது என்பது தெரியவந்தது. இதனையடுத்து, இதில் தொடர்புடைய பாஸ்கர் (50),  முத்து (55) ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து ரூபாய் 3 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

3

Leave A Reply

Your email address will not be published.