திருச்சி அழகு நிலையத்தில் கத்தியை காட்டி செல்போன் பறிப்பு:

0
1

திருச்சி அழகு நிலையத்தில் கத்தியை காட்டி செல்போன் பறிப்பு:

திருச்சி தென்னூர் பகுதியை சேர்ந்தவர் பூபதி (27). இவருடைய மனைவி ஷோபனா தேவி. இவர் சாஸ்திரி ரோட்டில் பியூட்டி பார்லர் நடத்தி வருகிறார். இங்கு நந்தினி,ரமணி, சுமதி ஆகிய 3 பெண்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் (28/09/2021)  பியூட்டி பார்லரில் வழக்கம்போல் சோபனா உட்பட மூன்று பெண்கள் பணியில் இருந்தனர். அப்போது திடீரென 4 பேர் கொண்ட மர்ம கும்பல் அத்துமீறி உள்ளே நுழைந்தனர்.

2

மேலும் கத்தியை காட்டி மிரட்டி சோபனா தேவி உட்பட பணியாளர்கள் 3 பேரின் செல்போன்களையும் பறித்துச் சென்றனர்.

இதுகுறித்து அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

3

Leave A Reply

Your email address will not be published.