திருச்சியில் வனவிலங்கு வார விழாவையொட்டி பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான போட்டி:

0
1

திருச்சியில் வனவிலங்கு வார விழாவையொட்டி பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான போட்டி:

தமிழ்நாடு வனத்துறையின் மூலம் ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் வனவிலங்கு வார விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது . அதேபோல் திருச்சி வனக்கோட்டத்தில் இந்த ஆண்டிற்கான வனவிலங்கு வார விழா, திருச்சி மண்டல வனப்பாதுகாவலர் அவர்களின் அறிவுறுத்தலின்படியும் மாவட்ட வன அலுவலர் அவர்களின் வழிகாட்டுதலின்படியும் வன உயிரினம் தொடர்பான குறும்படம் உருவாக்குதல் மற்றும் வன உயிரின தொடர்பான சின்னங்கள் உருவாக்குதல் ஆகிய இரண்டு போட்டிகள் (25.09.2021 முதல் 03.10.2021)வரை ஆன்லைன் மூலம் தமிழ்நாடு மாநில அளவில் நடத்தப்படுகிறது .

2

இந்த இரண்டு போட்டிகளில் கலந்து கொள்ள விருப்பமுள்ள பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் மற்றும் ஏனையவர்கள் தங்களது குறும்படங்கள் மற்றும் சின்னங்கள் https ://forms.sle/cPQ39VGFKENDwkhme ஆகிய ஆன்லைன் இணைப்பின் மூலமாகவோ அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள க்யூ ஆர் குறியீடு ( QR Code ) மூலமாகவோ 03.10.2021 அன்று மாலை 05:00 மணிக்கு முன்பாக அனுப்பப்பட வேண்டும் .

வன உயிரினம் தொடர்பான குறும்படம் உருவாக்குதல் ( Short Film ) போட்டியில் கலந்துகொண்டு மாநில அளவில் வெற்றி பெறும் முதல் மூன்று நபர்களுக்கு முறையே காசிரங்கா தேசிய பூங்கா ( அசாம் ) , ஜங்கிள் லாட்ஜஸ் ( கர்நாடகா ) , முதுமலை புலிகள் காப்பகம் ( தமிழ்நாடு ) ஆகிய இடங்களுக்கு பயணம் சென்றுவர வனத்துறையின் சார்பாக அமைத்து தரப்படும் .

குறும்படம் மற்றும் சின்னங்கள் உருவாக்குதல் ஆகிய போட்டிகளுக்கு ஆன்லைன் இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளின் கீழ் மட்டுமே உருவாக்கி அனுப்ப வேண்டும் . மேலும் திருச்சி மாவட்ட அளவில் வன உயிரினம் தொடர்பான ஓவியம் மற்றும் கட்டுரைப் போட்டி , பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் நடத்தப்படுகிறது .

இப்போட்டியில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் https : // formsg /n/aTakt4eiDDd765ML7 என்ற ஆன்லைன் இணைப்பின் மூலமாகவோ அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள க்யூ ஆர் குறியீடு ( QR Code ) மூலமாகவோ 03.10.2021 அன்று மாலை 05:00 மணிக்கு முன்பாக அனுப்பப்பட வேண்டும் .

வன உயிரினம் தொடர்பான ஓவியம் மற்றும் கட்டுரைப் போட்டியில் திருச்சி மாவட்ட அளவில் வெற்றி பெறும் போட்டியாளர்களுக்கு முதல் , இரண்டாம் , மூன்றாம் பரிசுகள் வழங்கப்படும் என்று மாவட்ட வனத்துறையின் சார்பாக தெரிவிக்கப்படுகிறது .

 

3

Leave A Reply

Your email address will not be published.