திருச்சி அருகே காலி மது பாட்டில்கள் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து :

0
1

திருச்சி அருகே காலி மது பாட்டில்கள் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து :

தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப் பள்ளியிலிருந்து சென்னை பூந்தமல்லிக்கு 10 டன் எடை கொண்ட காலி பாட்டில்கள் ஏற்றி வந்த லாரி லால்குடி வழியாக சென்னை சென்று கொண்டிருந்தது.

இந்நிலையில் திருச்சி மாவட்டம் லால்குடி நம்பர்.1 டோல்கேட் சாலையில் செல்லும்போது லாரியை தாறுமாறாக ஓட்டியதால் உள்ளே இருந்த காலி பாட்டில்கள் சாலையில் விழுந்தது. மேலும், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி அருகே இருந்த பஸ் நிறுத்த நிழற்குடை மற்றும் மின்சாரக் கம்பத்தின் மீது மோதி அருகே இருந்த 2 கார்கள் மீது கவிழ்ந்தது. இதில் 2 கார்களும் லாரியில் சிக்கி நொறுங்கியது.

2

இந்த விபத்தில் பேருந்து நிழற்குடைகள் அமர்ந்திருந்த ஒருவர் படுகாயமடைந்தார்.மேலும் லாரியை ஓட்டி வந்த ஓட்டுனர் படுகாயமடைந்தார்.

இந்த விபத்தினால் அப்பகுதியில் மின்சாரம் நீண்ட நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டது மற்றும் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீசாரின் விசாரணையில் லாரி ஓட்டி வந்தது திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் பகுதியை சேர்ந்த சுந்தரமூர்த்தி (23) என்பதும் அவர் மதுபோதையில் வாகனத்தை இயக்கியதும் தெரியவந்தது.

இதனையடுத்து அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

3

Leave A Reply

Your email address will not be published.