திருச்சி மாவட்டத்தில் 56% பேருக்கு தடுப்பூசி செலுத்தும் பணி நிறைவு:

0
1

திருச்சி மாவட்டத்தில் 56% பேருக்கு தடுப்பூசி செலுத்தும் பணி நிறைவு:

திருச்சி மாவட்டத்தில் கடந்த 12,19 மற்றும் 26-ஆம் தேதிகளில் நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

இந்நிலையில் நேற்று முன்தினம் 26ந்-தேதி நடைபெற்ற தடுப்பூசி முகாமில் அதிக அளவில் தடுப்பூசி செலுத்திய மாவட்டங்கள் பட்டியல் திருச்சி இரண்டாம் இடத்தைப் பிடித்ததுள்ளது.

2

இதுகுறித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் கூறியதாவது:

திருச்சி மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை 22 லட்சத்து 82 ஆயிரத்து 552 ஆகும் . மாவட்டத்தில் இதுவரை 12 லட்சத்து 76 ஆயிரத்து 209 பேர் முதல் தவணை தடுப்பூசியும், 4 லட்சத்து 17 ஆயிரத்து 68 பேர் இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தி உள்ளனர் .

இதன் மூலம் புறநகரில் 52.3 சதவீதமும் , மாநகரில் 63.3 சதவீதமும் என மொத்தம் திருச்சி மாவட்டத்தில் 55.9 சதவீதம் பேர் தடுப்பூசி செலுத்தி உள்ளதாக கூறினார்.

3

Leave A Reply

Your email address will not be published.