திருச்சியில் தேர்தல் பணி சம்பள பாக்கியை கேட்டு காரை கலெக்டரிடம் ஒப்படைக்க வந்த டிரைவர்:

0
1

திருச்சியில் தேர்தல் பணி சம்பள பாக்கியை கேட்டு காரை கலெக்டரிடம் ஒப்படைக்க வந்த டிரைவர்:

திருச்சி கருமண்டபம் பகுதியை சேர்ந்தவர் சண்முகம் (54). இவர் திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் கார் ஸ்டாண்டில் வாடகைக்கு கார் ஓட்டி வருகிறார். இந்நிலையில் கடந்த சட்டமன்றத் தேர்தலில் லால்குடி தொகுதிக்கு தேர்தல் பணிக்காக சென்றுள்ளார்.

2

தேர்தல் பணியில் ஈடுபடும் டாக்சி டிரைவர் பேட்டா வாடகை உட்பட ரூ.2400 தர வேண்டும் என அரசு நிர்ணயித்துள்ளது. ஆனால் லால்குடி தேர்தல் நடத்தும் அலுவலர் ரூ.1500 மட்டுமே தருவதாக கூறினார். நாங்களும் கொரோனா காலகட்டத்தில் மிகவும் சிரமப்பட்டதால் வேறு வழியின்றி ஒப்புக் கொண்டோம். ஆனால் அந்த பணத்தையும் தராமல் இழுத்தடிக்கின்றனர்.

4

இதுவரை தனக்கு தேர்தல் பணிக்காக ரூ.15,000 வாடகை தர வேண்டும். நான்கு மாதங்களுக்கு மேலாக பணத்திற்காக அலைய வைக்கிறார்கள் இதனால் வேறு வழியின்றி கலெக்டரிடம் காரை ஒப்படைத்துவிட்டு செல்ல வந்ததாக கூறினார் சண்முகம்.

அங்கிருந்த காவல்துறையினர் சண்முகத்தின் காரை உள்ளே அனுமதிக்கவில்லை. அதனால் தான் கொண்டுவந்த மனுவை பெட்டில் போட்டு விட்டு சென்றார்.

3

Leave A Reply

Your email address will not be published.