திருச்சியில் ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த 2 இளைஞர்கள் கைது:

0
1

திருச்சியில் ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த 2 இளைஞர்கள் கைது:

திருச்சி மாநகரில் பழிக்கு பழியாக ரவுடிகள் கொலை செய்யப்பட்டு வருவது தொடர்ந்து வருகிறது. இதனை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநகர கமிஷனர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில் போலீசார் அதிரடியாக ரவுடிகளை கைது செய்து வருகின்றனர்.

இந்நிலையில் ஸ்ரீரங்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருவானைக்காவல் மணல்மேடு பகுதியில் பயங்கர ஆயுதங்களுடன் சந்தேகப்படும்படியாக 2 நபர்கள் சுற்றிக் கொண்டிருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

2

சோதனையில் மணல்மேடு பகுதியை சேர்ந்த தட்சிணாமூர்த்தி வயது 20 சுரேஷ் 33 ஆகியோர் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றி வந்தது தெரியவந்தது இதனையடுத்து அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த ஆயுதங்கள் பறிமுதல் செய்தனர்.

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

3

Leave A Reply

Your email address will not be published.