தடுப்பூசி செலுத்துவதில் மாநில அளவில் திருச்சி இரண்டாவது இடம்:

0
1

தடுப்பூசி செலுத்துவதில் மாநில அளவில் திருச்சி இரண்டாவது இடம்:

திருச்சி மாவட்டத்தில் கடந்த 12-ந் தேதி மற்றும் 19ந் தேதிகளில் இரண்டு முறை மாபெரும் கொரோனா தடுப்பூசி சிறப்பு  முகாம் நடைபெற்றது.

இதே போல் மூன்றாவது கட்டமாக நேற்று (26/09/2021) ஊரகப் பகுதிகளில் 353 இடங்களிலும், நகர்ப்பகுதிகளில் 162 இடங்களிலும் நடைபெற்றது.

2

இதன்படி திருச்சி மாவட்டத்தில் 1,06,156 பேருக்கு முதல் மற்றும் இரண்டாம் தவணைக் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரே நாளில் அதிக தடுப்பூசி செலுத்தி திருச்சி மாவட்டம் மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்துள்ளது என திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு தெரிவித்துள்ளார்.

3

Leave A Reply

Your email address will not be published.