எல்லோருக்கும் எல்லாமுமாய் இருந்தவர் திருச்சி அடைக்கலராஜ் ! வீடியோ !

0
1

எல்லோருக்கும் எல்லாமுமாய் இருந்தவர் திருச்சி அடைக்கலராஜ் !

திருச்சியில் மூத்த அரசியல் ஆளுமைகளில் ஒருவராக இருந்த அடைக்கலராஜ் குறித்து திருச்சி தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் மாவட்ட துணைத்தலைவர் சந்தானகிருஷ்ணன் கூறியது,

சந்தான கிருஷ்ணன்

திருச்சி அரசியலில் தவிர்க்க முடியாதவர் அடைக்கலராஜ், இவர் தந்தை லூர்துசாமி பிள்ளை திருச்சி நகராட்சியின் தந்தையாக விளங்கியவர். திருச்சிக்கு ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைத்தது, திருச்சி மாநகராட்சி கட்டிடத்தை அமைத்தது என்று முக்கிய பணிகள் லூர்துசாமி பிள்ளையையே சேரும்.

வீடியோ லிங்

2

திருச்சியின் ஆரம்பகாலத்தில் சாலை வசதி, குடிநீர் வசதி போன்றவற்றை திட்டமிட்டு வகுத்தவர் லூர்துசாமி பிள்ளை. இவரைப் பின்பற்றி இவருடைய மகனும் அரசியலுக்கு வந்தார். நான்கு முறை திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்று மக்களுக்காக பணியாற்றியவர் அடைக்கலராஜ்.

வீடியோ லிங்

 

அடைக்கலராஜ் பொறுத்தவரை தமிழக அரசியலில் மட்டுமல்ல திருச்சி அரசியலிலும் தவிர்க்க முடியாதவர், எந்த ஒரு மத்திய அமைச்சர் திருச்சிக்கு வந்தாலும் அவரை சந்திக்காமல் செல்ல மாட்டார். திருச்சியில் இருந்து கொண்டு தமிழக அரசியலில் செயல்படுத்தியவர் அடைக்கலராஜ்.
காங்கிரஸ் பேரியக்கத்தின் உடைய வளர்ச்சியிலும் முக்கிய பங்கு இவருக்கு இருக்கிறது. இவர் எல்லோருக்கும் எல்லாமுமாய் இருந்தார். மேலும் அவர் ஒவ்வொரு முறை தேர்தலில் வெற்றி பெறும்போதும் கடந்த முறை பெற்ற வாக்குகளை விட கூடுதல் வாக்குகளை பெற்றே வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. காங்கிரசுக்கும் இவருக்குமான நெருக்கமும், உறவும் எப்பொழுதும் இருக்கும்.

3

Leave A Reply

Your email address will not be published.