நல்லாசிரியர் விருது பெற்ற ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியை

0
1

நல்லாசிரியர் விருது பெற்ற ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியை

ஒவ்வொரு ஆண்டும் புதுப்புதுக் கனவுகளோடு பள்ளி வளாகத்திற்குள் அடியெடுத்து வைக்கும் குழந்தைகளின் எண்ணச் சிறகுகளுக்கேற்ப எழ , உயரம் தொட தன்னை தகவமைத்துக் கொள்பவரே சிறந்த ஆசிரியர் . புதிய மன ஆளுமையில் புதிய திட்டங்களில் , மாணவர்களின் இலக்கு கனவாக கலைந்து விடாமல் நிஜமாக பணி செய்பவரே திருவரம்பூர் ஒன்றியம் , மேலகல்கண்டார்கோட்டை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியை எஸ்.பீபி அப்துல் .

வீடியோ லிங்

2

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் ஆசிரியர் தினத்தன்று நடைபெற்ற அரசு விழாவில் டாக்டர் இராதாகிருஷ்ணன் விருதினை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடமிருந்து பெற்றார் எஸ்.பீபி அப்துல் .

இவ்விழாவில் மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு , திருச்சிகிழக்கு சட்டமன்ற உறுப்பினர் முனைவர் எஸ்.இனிகோ இருதயராஜ் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் இர.பாலமுரளி , முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.என்.சேகரன் , மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் கே.எஸ்.எம் . கருணாநிதி உடனிருந்தனர் .

– ச.பாரத்

 

3

Leave A Reply

Your email address will not be published.