என் கணவர்… மகாகவி பாரதியாரின் மனைவி திருமதி செல்லம்மாள் பாரதியின் உரை பாகம் – 1 :

0
1

என் கணவர்… மகாகவி பாரதியாரின் மனைவி திருமதி செல்லம்மாள் பாரதியின் உரை:

என் கணவர் நான் படித்தவளல்ல ஆயினும் மகாகவியுடன் எனது எழு வயது முதல் முப்பத்திரண்டு வயது வரை வாழும் பாக்கியம் பெற்றிருந்தேன் , அவருக்குபமுண்டாக்கும் கலை தெரியாது . என் க வயிற்றுப்பாட்டுக்காகத் தமிழ்த் தொண்டு செய்யவில்லை . அவர் எழுதிய பாடல்களை விற்று ஒரு லாபமும் பெறவில்லை . ஆர அமர உட்கார்ந்து யோசித்துக் கவிதை எழுதமாட்டார் . இரவோபகலோ , வீட்டிலோ வெளியிலோ , கடற்கரையிலோ , அவ்வப்பொழுது தோன்றும் உணர்ச்சிப் பெருக்கில் பிறந்தவையே அவரது கவிதைகள் , ஒரு சம்பவம் என்னால் மறக்க முடியாது . மதியம் ஒரு மணி ஆகிவிட்டது . சாப்பிடுவதற்கு அவர் வரவில்லை . மெதுவாகத் சென்று , தூரத்திலிருந்து எட்டிப் பார்த்தேன் .

என் கணவரின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தோடிக் கொண்டிருந்தது . ஏதோமகத்தான துயரம் ஏற்படாவிட்டால் அவர் கண்களிலிருந்து நீர் வராது . என்ன விஷயமோ ? ‘ என்ற திகில் கொண்டே கணவர் தியரென நிமிர்ந்து பார்த்தார் . ‘ செல்லம்மா , இங்கே வா ‘ என்றார் . சென்றேன் . கீழேயிருந்த எங்கள் குழந்தைகளையும் அழைத்தார் . ” நமது இந்திய மாதர்கள் அந்நிய நாட்டில் படும் பாட்டைக் கேளுங்கள் ‘ என்றார் . ” கரும்புத் தோட்டத்திலே என்ற பாட்டை அவர் பாடியதைக் கேட்ட நாங்களும் விம்மி விம்மி அழுதோம் .

2

மறுநாள் அந்தப்பாட்டு சென்னையில் ஒரு பொதுக்கூட்டத்தில் பாடப்பட்டது . அதைக் கேட்ட ஜனங்கள் எவ்விதத்திலும் ஒப்பந்தம் தொழிலாளரின் குறைகளைத் தீர்க்கவும் கங்கணம் கட்டிய கூலி முறையை ஒழிக்கவும் , அந்நிய நாடு சென்ற நமது நாட்டும் கொண்டார்கள் . காதல் ராணியாக மனைவியை போற்றும் கவிஞன் அவளுக்குச் சாதமும் போடவேண்டும் என்ற நினைவே யின்றிக் காலம் கழித்தானே ஆனால் , என்ன செய்ய முடியும் ?

-தொடரும்…

(1951 ஆம் ஆண்டு திருச்சி வானொலியில் மகாகவி பாரதியாரின் மனைவி திருமதி செல்லம்மாள் பாரதி ஆற்றிய உரை)

3

Leave A Reply

Your email address will not be published.