எளிய முறையில் சோப்பு தயாரிக்கலாம்… வீட்டிலிருந்தே பெண்களும் சம்பாதிக்கலாமே!

0
1

எளிய முறையில் சோப்பு தயாரிக்கலாம்… வீட்டிலிருந்தே பெண்களும் சம்பாதிக்கலாமே!

கெமிக்கல் இல்லாமல் மின்சாரம், எரிபொருள், இயந்திரங்கள் எதுவுமின்றி வீட்டிலேயே இயற்கையான முறையில் எளிமையாக சோப்பு தயாரிக்கலாம். இதற்கு செக்கு தேங்காய் எண்ணெய், காஸ்டிக் சோடா, தண்ணீர் ஆகிய 3 பொருட்கள் போதுமானது.

காஸ்டிக் சோடாவை 165 கிராம், தண்ணீர் 380 கிராம், சுத்தமான தேங்காய் எண்ணெய் 1 கிலோ என்ற அளவில் அனைத்தையும் வைத்துக் கொள்ள வேண்டும். முதலில் தண்ணீரில் காஸ்டிக் சோடாவை போட வேண்டும். இந்த காஸ்டிக் சோடா போட்ட உடன் சூடாகி சிறிது நேரத்தில் குளிரத் தொடங்கும். முழுமையாக வெப்பம் குறைந்தபின் தேங்காய் எண்ணெய்யை அதில் ஊற்றி ஒரு குச்சியை கொண்டு கிளற வேண்டும். இந்த கலவை கெட்டித் தட்டாமல் இருக்க விட்டுவிட்டு கிளற வேண்டும். சுமார் ஒரு மணி நேரம் இது போல் கிளறிய பின் அந்த கலவையை ஒரு அச்சில் ஊற்றி காய வைக்க வேண்டும். அவ்வளவு தான் சோப்பு ரெடி..!

2

காஸ்டிக் சோடா கைகளில் பட்டால் அரிப்பு, எரிச்சல் ஏற்படும் என்பதால் சோப்பு தயாரிக்கும் போது காஸ்டிக் சோடாவை பாதுகாப்பாக பயன்படுத்த வேண்டும். தண்ணீர் மற்றும் தேங்காய் எண்ணெய் இவ்விரண்டும் சுத்தமானதாக இருக்க வேண்டும்.

நீங்கள் தயாரித்த சோப்பு கலவையில்  சோற்றுக் கற்றாழை, வேப்ப எண்ணெய், அரப்பு, சீயக்காய், பைத்தமாவு, கடலைமாவு கலந்தும் கூட உங்கள் தேவைக்கு ஏற்ப விதவிதமாக  சோப்புகள் தயாரிக்கலாம்.

3

Leave A Reply

Your email address will not be published.