திருச்சியில் விதிகளை மீறி புகையிலை பொருட்கள் விற்ற டீக்கடைக்கு சீல்:

0
1

திருச்சியில் விதிகளை மீறி புகையிலை பொருட்கள் விற்ற டீக்கடைக்கு சீல்:

ஸ்ரீரங்கம் காவல் நிலையம் அருகே உள்ள டீக்கடைகளில் கடந்த 9ஆம் தேதி நடைபெற்ற சோதனையில் விதிகளை மீறி தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது.

இந்நிலையில், அந்த கடைகளில் தொடர்ந்து தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் உணவு பாதுகாப்பு துறையினர் நேற்று (24/09/2021) சோதனை மேற்கொண்டனர்

4

இச்சோதனையில், அபராதம் விதிக்கப்பட்டும் 3-வது முறையாக விதிகளை மீறி தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த டீக்கடைக்கு திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு அறிவுறுத்தலின்படி, உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் ரமேஷ்பாபு தலைமையில் சீல் வைக்கப்பட்டது.

2

இதேபோல் துறையூரில் உள்ள ஒரு கடையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் மேற்கொண்ட சோதனையில் 115 கிலோ குட்கா கண்டறியப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் இதுகுறித்து மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் ரமேஷ்பாபு கூறியதாவது:

இதுபோன்று தடைசெய்யப்பட்ட பான்மசாலா, குட்கா, புகையிலை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் மேலும் கடைக்கும் சீல் வைக்கப்படும் என எச்சரித்துள்ளார்.

மேலும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளைப் பற்றிய தகவல்களை பொதுமக்கள் 95859 59595, 99449 59595, 94440 42322 என்ற எண்களில் புகார் அளிக்கலாம் என கூறினார்.

 

3

Leave A Reply

Your email address will not be published.