திருச்சியில் பேருந்தில் சென்ற பெண்ணிடம் 7 1/2சவரன் நகை திருட்டு:

0
1

திருச்சியில் பேருந்தில் சென்ற பெண்ணிடம் 7 1/2சவரன் நகை திருட்டு:

திருச்சி சோமரசம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ஜான்சிராணி (வயது 34). திருச்சியில் உள்ள தனியார் கண் மருத்துவமனையில் கணக்காளராக பணியாற்றி வருகிறார்.  இவர் நேற்று முன்தினம் வழக்கம்போல் பணி முடிந்து வீட்டுக்கு பேருந்தில் புறப்பட்டார்.

அவரது கைப்பையில் 7 1/2 சவரன் நகை வைத்திருந்தார். இந்நிலையில் பேருந்தில் பயணித்த ஜான்சிராணி வீட்டிற்குச் சென்று பார்த்தபோது கைப்பையில் இருந்த நகையை காணவில்லை.

2

இதுகுறித்து ஜான்சிராணி அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.

3

Leave A Reply

Your email address will not be published.