திருச்சிராப்பள்ளி தூய வளனார் கல்லூரியில் வளனார் ஆய்வரங்கத் தொடக்க அமா்வு

0
1

திருச்சிராப்பள்ளி தூய வளனார் கல்லூரியில் வளனார் ஆய்வரங்கத் தொடக்க அமா்வு

தூய வளனார் கல்லூரியில் தமிழாய்வுத் துறையின் வளனார் ஆய்வரங்கத்தின் தொடக்க நிகழ்வு இன்று நடைபெற்றது. தமிழாய்வுத்துறை வளனார் ஒலி ஒளிக் கூடத்தில் நடைபெற்ற ஆய்வரங்கிற்குத் தமிழாய்வுத்துறைத் தலைவர் முனைவர் ஞா. பெஸ்கி. தலைமை வகித்தார்.


முனைவா் பட்ட ஆய்வாளா் கி.ஜோஸ் ஆல்வின் அறிமுக உரையாற்றினார். வல்லிக்கண்ணன் எழுதிய செவ்வானம் என்ற புதினம் குறித்துத் தமிழாய்வுத்துறை உதவிப்பேராசிரியர் முனைவர் ஆ. இராஜாத்தி திறனாய்வுரை வழங்கினார். முனைவர் பட்ட ஆய்வாளர் பா. எழில் செல்வன், பெரியபுராணத்தின் உரையாசிரியர் சி.கே. சுப்பிரமணியன் அவர்களின் உரைத்திறன் என்னும் மையப்பொருளில் ஆய்வுக்கட்டுரையைச் சமா்ப்பித்தார்.

2

இளங்கலை மூன்றாம் ஆண்டு மாணவி வீ.அட்சயா, கர்ணன் திரைப்படம் பிரதிபலிக்கும் சமூகக் கருத்துக்களை மேற்கோளிட்டுத் திறனாய்வு வழங்கினார். தொடா்ந்து கலந்துரையாடல் நடைபெற்றது.
நிறைவில் ஆய்வரங்கின் பொறுப்பாளர் முனைவர் ஆ. ஜோசப் சகாயராஜ் நன்றியுரையாற்றினார். இளங்கலை மூன்றாமாண்டு மாணவர் தயாநிதி நிகழ்வை நெறியாள்கை செய்தார். தமிழாய்வுத்துறைப் பேராசிரியர்கள், முனைவா் பட்ட ஆய்வாளா்கள், தமிழ் இலக்கிய மாணவா்கள் உட்பட 79 பேர் இந்த ஆய்வரங்கில் பங்கேற்றுப் பயன் அடைந்தனர்

3

Leave A Reply

Your email address will not be published.