தடுப்பூசி செலுத்திக் கொண்ட பெண் திடீர் மரணம்: உறவினர்கள் உடலை வாங்க மறுத்து மருத்துவமனையை முற்றுகை:

0
1

தடுப்பூசி செலுத்திக் கொண்ட பெண் திடீர் மரணம்: உறவினர்கள் உடலை வாங்க மறுத்து மருத்துவமனையை முற்றுகை:

Karur Recent News :

கரூர் மாவட்டம் குளித்தலை பகுதியை சேர்ந்த பெண் கடந்த 19ஆம் தேதி செம்பரை கல்லுப்பட்டி அரசு தொடக்கப்பள்ளியில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டு உள்ளார்.

2

இந்நிலையில் இவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு தோகைமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த 2 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (22/09/2021) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த உறவினர்கள் தடுப்பூசி செத்தி கொண்டதால்தான் பெண் இறந்துவிட்டதாக கூறி உடலை வாங்க மறுத்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் பிரேத பரிசோதனைக்கு மேற்கொண்டு உடலை வாங்கிக் சென்றனர்.

3

Leave A Reply

Your email address will not be published.